உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விழுப்புரம் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விழுப்புரம்: செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதுத்துல்லாகான் மசூதியில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. விழுப்புரம் நகரத்திலுள்ள 29 பள்ளி வாசல்களிலும், ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது. விழுப்புரம் வடக்குத் தெருவிலுள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஷரீப் மகால்லா பள்ளி வாசல் சார்பில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில், மதகுருக்கள் அக்பர், சுலைமான், அபுதாகீர், முத்தவல்ளிகள் சுபான், பியாரேஜான் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட காங்., தலைவர் குலாம்மொய்தீன், நிர்வாகிகள் லியாகத் அலி, அல்லாபக்ஷ், கமலா பள்ளி நிர்வாகி அஷ்ரப்கான், பேராசிரியர் ரகமத்துல்லாகான், பஷீர்
அகமது உட்படபலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் ஒன்றிணைந்து தொழுகையை நடத்தினர். இதில், ஜிம்மா, நடுத்தக்கா, காட்டுபுரிதக்கா, சமதியா, கோட்டைமேடு, நீலமங்கலம், வ.உ.சி., நகர், கரியப்பா நகர், ஈத்கா
உள்ளிட்ட பள்ளி வாசல்களை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதுத்துல்லாகான் மசூதியில்,  ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதை முன்னிட்டு பீரங்கிமேடு பெரிய பள்ளி வாசலில் இருந்து எம்.ஜி.ஆர்., நகர்,
என்.ஆர்.பேட்டை, சின்ன பள்ளி வாசல், பெரியபள்ளி வாசல் ஜமாத்தினர் ஊர்வலமாக வந்தனர். செஞ்சி கூட்ரோட்டில் ஜமாத் தலைவர் அப்துல் மஜீத்பாபு பிறை கொடி யேற்றினார்.

பின்னர் திருவண்ணாமலை சாலை வழியாக ஊர்வலமாக சாதுத்துல்லாகான் மசூதியை அடைந்தனர். அங்கு ஷமீம் அக்தர், சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஜமாத் தலைவர்கள் அலிம் குரோஷி, முனீர் பாஷா, அன்சார், முபாரக் அலி பங்கேற்றனர். இதே போல், செஞ்சி சந்தை தோப்பு பள்ளி வாசல் ஜமாத்தினர், ஊர்வலமாக சென்று சிறுகடம்பூர் ஏரியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !