கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :3069 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்டத்தினர், உழவாரப் பணி மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவில்
மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் முகாம் நடந்தது. திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்டத்தை சேர்ந்த 78 தொண்டர்கள், இப்பணிகளில் ஈடுபட்டனர். காலை முதல் மதியம் வரை, உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.