சூரமங்கலம் சனீஸ்வர பகவானுக்கு கும்பாபிஷேக விழா
ADDED :3069 days ago
சூரமங்கலம்: சேலம், ஐந்து ரோடு அருகே அமைந்துள்ள, சனீஸ்வர பகவானுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சேலம், ஐந்து ரோடு, ரெட்டியூரில் சூட்சும மகாசக்தியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள நவக்கிரகத்தின் முன்பாக, மேற்கு திசை நோக்கி சனிபகவான்
தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை, 6:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் சனீஸ்வர சுவாமி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வேதஆகம முறைப்படி நடந்தது. ஏராளமான
பக்தர்கள், சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்.
கும்பாபிஷேகத்திற்காக திருநள்ளாறில் இருந்து தீர்த்தம், யந்திரம், விக்ரகத்தை அங்குள்ள சிவாச்சாரியார்கள் கொண்டு வந்தனர். விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.