உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. அதை தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை கொண்டு சென்று, கெங்கையம்மன் சன்னதி மேல் உள்ள கலசத்தில், புனித நீரை ஊற்றி, கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !