நாகூர் தர்காவில் ரம்ஜான் தொழுகை
ADDED :3069 days ago
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில், இஸ்லாமியர் களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, நாகை மாவட்டம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகூரில் பிரசித்தி பெற்ற, ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதியபின் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்திய, இஸ்லாமியர்கள், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.