உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை : பாப்பநாயக்கன்பாளையம் புதுாரில் மாரியம்மன் மற்றும், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25ல் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மேல் முதல் யாகசாலை பூஜையும், இரவு 9:00 மணிக்கு உபசாரபூஜை தீபாராதனையும் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, காலை 4:30 மணியளவில் யாகசாலை பூஜைகளும், காலை 5:30 மணிக்கு மகா தீபாரதனையும், காலை 6:00 மணிக்கு மேல் கும்பாபிசேக விழாவும் நடந்தன. தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில், காலை 6:30 மணிக்கு யாகபூஜைகளும், 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், விமான கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு மகா கும்பாபஷேகமும் நடந்தன. பிற்பகல் 12:00 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !