உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அனுமந்தை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மரக்காணம்: அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் எதிரில் யாகசாலை அமைத்து, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லக்கில் அமர்த்தி, ஊஞ்சலில் வைத்து உற்சவம் நடத்தினர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !