சமுக்தியாம்பிகை கோவிலில் புனர்பூச பேராபிஷேக விழா
ADDED :3067 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாடகைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில், ஆனி புனர்பூச பேராபிஷேக விழா நடந்தது. கணபதிபூஜையுடன் துவங்கிய விழாவில், லலிதசஹஸ்ரநாம பாராயணமும் திரிசதி அர்ச்சனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சமுக்தியாம்பிகை பேராபிஷேகமும் மற்றும் ஆனந்த தரிசன நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்து வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.