உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜருக்கு 30ல் ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு 30ல் ஆனி திருமஞ்சனம்

திருவள்ளூர்: நால்வர் திருமடம் சார்பில், நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம், வரும் 30ல் நடைபெறுகிறது. ஆனி உத்தர நட்சத்திரத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் (ஆனி திருமஞ்சனம்) நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சனம், வரும் 30ல், மணவாளநகர், நால்வர் திருமடத்தில் நடக்கிறது. அன்று, மாலை 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், சிவனடியார்களின் தேவாரம், திருவாசகம் ஓதுதலும் நடைபெறும். தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவும், இரவு, 7:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !