உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, தக்கார் சீனிவாசன், ஆய்வர் ராமநாதன், செயல் அலுவலர் மதனா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.  இதில் பக்தர்கள் செலுத்திய தொகை 5 லட்சத்து 6 ஆயிரத்து 727 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும் 7.500 கிராம் தங்க நகை மற்றும் 136 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !