உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பொற்சோதிநாதர் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குரு பூஜை

செம்பொற்சோதிநாதர் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குரு பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில், மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் மாணிக்கவாசகருக்கு ஆனிமாத மகம் நட்சத்திர தினமான நேற்று, ஆண்டு குருபூஜை விழா நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கி, நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டது. அடியார்களின் கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. நிறைவாக அச்சோபதிகம் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !