மதுரையில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா
ADDED :3065 days ago
மதுரை, மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன் தலைமை வகித்தார். ஆராய்ச்சி மையம் செயலாளர் கண்ணன் வரவேற்றார். நிறுவனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தருமை ஆதீன புலவர் குருசாமி தேசியர் குருபூஜை நடத்தினார். வருமான வரித்துறை ஓய்வு பெற்ற கமிஷனர் சங்கரலிங்கம் பேசினார். நிகழ்ச்சியை ஆராய்ச்சி மைய அமைப்பாளர் அஸ்வின் ஜெயகுமார் தொகுத்து வழங்கினார். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.