உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோவிலில் இப்தார் நிகழ்ச்சி : உடுப்பி மடாதிபதிக்கு காங்., பாராட்டு

கிருஷ்ணர் கோவிலில் இப்தார் நிகழ்ச்சி : உடுப்பி மடாதிபதிக்கு காங்., பாராட்டு

பெங்களூரு: “கிருஷ்ணர் கோவிலில் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, இந்து, முஸ்லிம் சமுதாயத்தினரை ஒன்றாக அழைத்துச் செல்லும் பணியில், உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளின் முயற்சி வரவேற்கத்தக்கது,” என, மாநில காங்., தலைவர் ஜி.பரமேஸ்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பெங்களூரு குயின்ஸ் ரோட்டிலுள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், அக்கட்சி மாநில தலைவர் ஜி.பரமேஸ்வர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்தார் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, இந்து, முஸ்லிம் சமுதாயத்தினரை ஒன்றாக அழைத்துச் செல்லும் பணியில், உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் செய்துள்ளார். இந்த செயல்பாடு வரவேற்கத்தக்கது. இது, மற்ற மடாதிகளுக்கு எடுத்துக்காட்டாகும். மடாதிபதிகளுக்கு எதிராக சிலர் பேசுவது சரியில்லை. சமூகத்தில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவித்து, குழப்பத்தை உண்டாக்குகின்றனர். அனைவரும் ஒன்றாக வாழ வேண்டுமென, அரசியலமைப்பு கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான உணவு சாப்பிடுவதற்கு உரிமையுள்ளது. எனவே, ஒருவரின் உணவு பழக்க வழக்கம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு, யாருக்கும் அதிகாரமில்லை. அமைச்சரவையில் காலியாக உள்ள மூன்று இடங்களை, நிரப்புவதற்கு, முதல்வர் சித்தராமையா விரைவில், முடிவு செய்வார். யாரை சேர்ப்பது, யாருடைய துறையை மாற்றுவது என்பதை அவர் தான், முடிவு செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !