மோசூரம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்
மோச்சேரி : மோச்சேரி, மோசூரம்மன் கோவிலில், நாளை மாலை, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரியில், மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான தேரோட்டம், நாளை மாலை, 3:00 மணிக்கு நடைபெற உள்ளது.தேரோட்டத்தையொட்டி, 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பால் குட ஊர்வலமும், மாலை, 4:00 மணிக்கு, ஊரணிப்பொங்கலும் வைக்கப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, இன்னிசை நாதஸ்வர மேள கச்சேரியும், இரவு, 1:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று இரவு, தெய்வீக நாடகம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. நாளை மாலை, மோசூரம்மன், தேரில் எழுந்தருள்கிறார். அதன் பின், தேரோட்டம் நடைபெற உள்ளது.மாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.