கண்டாச்சிபுரத்தில் குருபூஜை
ADDED :3063 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாணிக்க வாசகர் குருபூஜை நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு, மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பிரகார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாணிக்கவாசகருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிவனடியார்கள் திருவாசகம் பாடினர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், ஓதுவாரகள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் செய்தனர்.