எமனேஸ்வரம் நாகநாதர் கோயில் கும்பாபிேஷகம்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வடக்கு ரதவீதியில் அருள்பாலிக்கும் காளிங்கநர்தன சந்தான கிருஷ்ண நாகநாதர் கோயில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. முன்னதாக ஜூன் 29 ல் காலை 9:00மணிக்கு அனுக்கை, விஸ்வக்ேஸானா பூஜை, சுமங்கலி பூஜைகளுடன் விழா துவங்கியது. அன்று மாலை 6:00 மணி முதல் வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரமும் முதல்கால யாகபூஜைகள் நிறைவடைந்து இரவு பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜைகள் துவங்கி, கோ பூஜை, மகாபூர்ணாகுதி நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு மேல் மகா கும்பாபிேஷகமும், தீபாராதனை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இன்னிசை கலை நிகழ்ச்சிகள், மேள கச்சேரிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் மாருதிராமன், செயலாளர் விஜயராகவன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.