அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை, மதுரை அய்யர்பங்களா அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி இரு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று சுவாமிநாதன் குழுவினரின் நாதஸ்வர இசையுடன் 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து செல்வ விநாயகர், நந்தியம் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத செல்வசுப்பிரமணியர், செல்வபைரவர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வ கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. குமார் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின் அபிேஷகம், அன்னதானம் நடந்தன. உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு சிறப்பு பிளீடர் கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் ஜீவானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் அய்யாவு தேவர்நகர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.