காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3055 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த, கருப்பத்தூர் சோம காளியம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சோமகாளியம்மன், காமாட்சி அம்மன் கோவில்கள் புதியதாக கட்டப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வந்து, கணபதி ஹோமம், யாக பூஜைகள், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று யாக பூஜைகள் துவங்கப்பட்டு, கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பெட்டவாய்த்தலை தேவஸ்தான சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.