சோளீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :5085 days ago
பேரம்பாக்கம் : தர்ம சாஸ்தா சேவா சங்கம் சார்பில், 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை பேரம்பாக்கத்தில் நடந்தது.பேரம்பாக்கம் காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது தர்ம சாஸ்தா கோவில். இக்கோவிலில் திருவிளக்கு பூஜை, நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு 7 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடந்தது.