கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான வைர விழா
ADDED :3043 days ago
சேலம்: கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான வைர விழா நடந்தது. சேலம், கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான திருப்புகழ் சபையின், 60வது வைர விழா, நேற்று நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி வேணுகோபால் செட்டியார் தலைமை வகித்தார். இதில், சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, கணபதி, லட்சுமி ஹோமங்கள், 60 திருப்புகழ் பாராயணம், கந்த மஹாயாகம், பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது. மதியம், 60 கலச தீர்த்த அபிஷேகம் செய்து, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.