ரங்கநாதர் கோவிலில் சுதர்சன ஹோமம் நிறைவு
ADDED :3042 days ago
ஈரோடு: சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், உலக உயிரினங்கள் நலம் வேண்டி, மூன்று நாட்கள் மஹா சுதர்சன ஹோமம் தொடங்கியது. ஐந்தாம் கால பூஜையுடன் நேற்று நிறைவடைந்தது.இதையொட்டி ஒரு லட்சத்து, எட்டு ஆவர்த்தி ஹோம பூர்த்தி, மஹா அலங்காரம், விசேஷ சாற்றுமுறை தீபாராதனை நடந்தது. கலச புறப்பாடு, மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சக்கரத்தாழ்வார் உற்சவருக்கு, சிறப்பு திருமஞ்சன காப்பு நடந்தது. வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுபடி நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை நடப்பதால், ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.