அம்மன் கோவிலில் இன்று திருவிழா
ADDED :3028 days ago
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அடுத்த, கருமனூரில் கற்பக விநாயகர், கரியகாளியம்மன், காகத்தலை அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இங்கு, ஆனி மாத திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, ஜூன், 6ல் அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று வரை, நாள்தோறும் அம்மனுக்கு அபி?ஷக, ஆராதனைகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணியளவில், பெரிய அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல், மாலை, 4:00 மணிக்கு, சின்ன அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல், வாண வேடிக்கை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.