உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு: சிதம்பர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகமாக நடந்தது. ஈரோடு, பெரியார் நகர், சிதம்பரம் காலனியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிதம்பர விநாயகர் கோவில் உள்ளது. சில மாதங்களாக கோவில் திருப்பணி நடந்தது. நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், ஜூன், 30ல் தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. பெரியார் நகர், சிதம்பரம் காலனி, சூரம்பட்டி, பொய்யேரிக்கரை, கைக்கோளன் தோட்டம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !