பனப்பாக்கத்தம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
ADDED :3028 days ago
திருத்தணி: பனப்பாக்கத்தம்மன் கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் அடுத்த, பழைய பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள பனப்பாக்கத்தம்மன் கோவில் திருப்பணிகள், கடந்த மாதம், 26ம் தேதி முடிவடைந்தன. அன்று முதல் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலை, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், மூலவருக்கு வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.