உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தசாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்

ஆனந்தசாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்

உடுமலை : உடுமலை, தில்லை நகர், ஆனந்தசாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம், நாளை துவங்குகிறது. உடுமலை, மாரியப்பா லே அவுட் தில்லை நகரில் ஆனந்த சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் நான்காம் ஆண்டு மற்றும் பவுர்ணமியை யொட்டி, நாளை (6ம்தேதி) முதல் 9ம் தேதி வரை குரு பவுர்ணமி விழா நடக்கிறது. விழாவில், 6ம்தேதி, பஜனை மற்றும் சிறப்பு அபிேஷக ஆராதனை, 7ம் தேதி விளக்கு பூஜை, 8ம் தேதி குருபூர்ணிமா மற்றும் சங்காபிேஷகம், 16 வகையான சிறப்பு அபிேஷகங்களும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தசாய் கோவில் நிர்வாகம் மற்றும் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !