உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமனூர் அம்மன் கோவில் திருவிழா

கருமனூர் அம்மன் கோவில் திருவிழா

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அடுத்த கருமனூரில், கற்பக விநாயகர், கரியகாளியம்மன், காகத்தலை அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆனிமாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, ஜூன், 6ல் அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த, 3 வரை நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை, பெரிய அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல், மாலை, சின்ன அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல், வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !