விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
சிவகங்கை, சிவகங்கை மஜீத்ரோடு செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஜூலை 3 காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடந்தன. ஜூலை 5 காலை 7:00 மணி நான்காம்கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 10:45 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை, மகாஅபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது.
* ஆயுதப்படை ஆரியபவன் நகர் வெள்ளை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
*சிவகங்கை அருகே அம்மச்சிப்பட்டி மனைகோலி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜூலை 3 காலை 9:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு முதல்கால யாகபூஜை, நேற்றுமுன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம்கால யாகபூஜை நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் காலயாகபூஜை, காலை 9:05 மணிக்கு கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
* தேவகோட்டை ராம்நகர் அரசு அலுவலர்கள் வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் மகாமண்டபம், முகப்பு மண்டபம் புதிதாக திருப்பணி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு காலயாகபூஜையை தொடர்ந்து பாபு குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.