மந்தை காளியம்மன் கோயில் பாலாலய விழா
ADDED :3032 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கமாக பால ஆலாய விழா நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை அமைத்து திருப்பணிகள் துவக்கப்பட்டது. தொடர்ந்து பட்டக்காரர் மங்களகாந்தி, கிராம கோயில் மேலாளார் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆவணி மாதம் இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.