கன்னியம்மன் கோவிலில் நாளை ஜாத்திரை விழா
ADDED :3032 days ago
மணவாளநகர் : மணவாள நகர், கன்னியம்மன் கோவிலில், 48ம் ஆண்டு, ஜாத்திரை விழா, நாளை துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடைபெறும். பின், 8ம் தேதி, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு பால் குடம் எடுத்தலும், மாலை 4:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும் நடைபெறும். பின், 9ம் தேதி, காலை 10:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மதியம் 1:00 மணிக்கு சப்தகன்னி பூஜையும் நடைபெறும். பின், மாலை 7:00 மணிக்கு ஜாத்திரை விழா நடைபெறும். பின், வரும் 16ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, விடையாத்தி அமமன் வீதிஉலாவும் நடைபெறும்.