சக்தி காளியம்மன் கோவில் குடமுழுக்கு
ராசிபுரம்: சிங்களாந்தபுரம், சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அருகே, சிங்களாந்தபுரம், சக்தி காளியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, தொடர்ந்து, மங்கள ஹோம பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு, ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தலைமையில், புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, திருக்கல்யாணம், மாங்கல்யம் சாற்றுதல் நடந்து, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் மா.பொ.சி.தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள கணபதி கோவிலில், நேற்று காலை, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.