உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

வாழப்பாடி: மழை வேண்டி, மக்கள், கூட்டு பிரார்த்தனை நடத்தினர். வாழப்பாடி அடுத்த, பொன்னாரம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, பால்குடம் ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், பால்குடம் சுமந்து வந்து, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், வறட்சி நீங்கி, மழை பெற வேண்டி, மக்கள், கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !