மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3036 days ago
மொடக்குறிச்சி: அவல்பூந்துறை சோளிபாளையத்தில், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மொடக்குறிச்சி அடுத்த, அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையத்தில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், கோபுரம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த, 2ல், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த, 3ல் விநாயகர் வழிபாடு, புன்னியாகவாசம், கணபதி யாகம், துர்கா லஷ்மி மற்றும் சரஸ்வதி யாகம், நவக்கிரஹ யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. நேற்று காலை, ஐந்தாம் கால யாக வேள்வி, காயத்திரி ஹோமம், பூர்ணாகுதி, யாத்ர தானம் உள்ளிட்ட பூஜைகள் செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.