உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரிகாத்த ராமர் கோவிலில் நாச்சியார் விழா விமரிசை

ஏரிகாத்த ராமர் கோவிலில் நாச்சியார் விழா விமரிசை

மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில், நாச்சியார் திருக்கோலம் விமரிசையாக நடந்தது. மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் இந்த கோவிலில், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன், 2ல் துவங்கியது. தொடர்ந்து, கருடசேவை விழா நடந்தது.நேற்று, நாச்சியார் திருக்கோலம் விழாவில், கருணாகர பெருமாள் எழுந்தருளினார். நாளை காலையில் பெரியபெருமாள் திருமஞ்சனம், இரவு, ராமர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெள்ளி தேரில் வீதியுலாவும், 9ல் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி விதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !