திருத்தணி முருகன் கோவிலில் ஆக., 15ல் ஆடி கிருத்திகை
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை, அடுத்த மாதம், 15ம் தேதி நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை விழாவை ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிக்கிருத்திகையையொட்டி, மூன்று நாள் தெப்பத் திருவிழாவும் வெகுவிமர்ச்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில், ஆடிக்கிருத்திகை விழா, அடுத்த மாதம், ஆக.,15ம் தேதி, ஆடிக்கிருத்திகை நடைபெறும். அதாவது, ஆடி மாதத்தில் வரும், இரண்டாவது கிருத்திகை விழா அன்று தான் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படவுள்ளது. இது குறித்து, கோவில் இணை ஆணையர் சிவாஜி கூறியதாவது: பொதுவாகவே ஆடி மாதத்தில், ஒரு கிருத்திகை விழா தான் வரும். ஆனால், நடப்பாண்டில் ஆனி மாதத்தில், வரும், 19ம் தேதியும், ஆக.,15ம் தேதியும் என, இரண்டு கிருத்திகை விழா வருகிறது. ஆகையால், பக்தர்கள் மத்தியில், 19ம் தேதி ஆடிக்கிருத்திகை விழாவா, இல்லை, ஆக., 15ம் தேதி ஆடிக்கிருத்திகை விழாவா, என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.நமது கோவிலின் ஐதீகம் படி, அடுத்த மாதம், 15ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்படுகிறது.மேலும், மூன்று நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆகையால், ஆக., 15ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை விழா ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆடிக்கிருத்திகை விழா நிகழ்ச்சி நிரல் விபரம்
ஆக. 13 அஸ்வினி கிருத்திகை
ஆக. 14 ஆடிப்பரணி கிருத்திகை
ஆக. 15 ஆடிக்கிருத்திகை மற்றும் முதல்நாள் தெப்பம்
ஆக. 16 இரண்டாம் நாள் தெப்பம்
ஆக. 17 மூன்றாம் நாள் தெப்பம்.