திருப்புத்துார் சேவுகப்பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :3019 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம், பரியாமருதுப்பட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது. இந்த கோயிலில் ஆனி மாதம் 10 நாள் ஆனித் தேரோட்ட உற்சவம் நடைபெறும். நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்து தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தில் பரியா மருதுபட்டி, நெற்குப்பை, துவார், பொன்னமராவதி, கட்டையாண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.