உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி காமாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சாயல்குடி காமாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சாயல்குடி: சாயல்குடி காமாட்சியம்மன் கோயிலில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. காலை 7:00 மணிக்கு  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் மகா வருஷாபிஷேகத்தில் விநாயகர், கருப்பண்ணசாமி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பகல் 11:30 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு 108 விளக்கு பூஜையும் நடந்தது. பூஜைகளை சண்முக பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின்முறை சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !