திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3348 days ago
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தின விழா நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்கள், உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. உற்சவர்கள் மணக் கோல அலங்காரத்தில் எழுந்தருளினர். பூஜைகள் முடிந்து மாலை மாற்றி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.