உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லிமலை வல்வில் ஓரி விழா: ஆக., 2ல் கோலாகல துவக்கம்

கொல்லிமலை வல்வில் ஓரி விழா: ஆக., 2ல் கோலாகல துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், வல்வில் ஓரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆக., 2, 3 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது: கடையேழு வள்ளல்களில், ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டுதோறும், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, ஆக., 2, 3 ஆகிய நாட்களில், கொண்டாடப்பட உள்ளது. அரசு சார்பில், இவ்விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர் கண்காட்சி திறப்பு விழாவில், அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டு, சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !