உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சியாண்டவர் கோயிலில் மண்டல பூஜை

குறிஞ்சியாண்டவர் கோயிலில் மண்டல பூஜை

கொடைக்கானல்:  கொடைக்கானலில் குறிஞ்சியாண்டர் கோயிலில் கும்பாபிஷேக விழா மே மாதம் நடந்தது. நேற்று குறிஞ்சியாண்டவருக்கு 48 வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா, யாகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. குறிஞ்சியாண்டவர் சிறப்பு கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் குறிஞ்சியாண்டவரை அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். மண்டலாபிஷேக நிறைவு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழநி தண்டாயுதபாணி கோயிலின் நிர்வாக அதிகாரி செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !