வத்திராயிருப்பு கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல்
ADDED :3013 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவின் மூன்றாம்நாளில் கருட வாகன எழுந்தருளல் நடந்தது. இதனையொட்டி காலையில் கோயில் முன் உள்ள ஆண்டாள் அலங்காரப் பந்தலில் உற்சவர் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எழுந்தருளினர். மூவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகளுடன் கூடிய திருமஞ்சன வழிபாடு நடந்தது. வேதவிற்பன்னர்களின் திவ்யநாம பஜனை வழிபாடு, யாகபூஜைகள் முடிந்தபின் சுவாமி கருட வாகனத்தில் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார். கோயிலில் தீபாராதனை வழிபாடு நடந்தது. பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்று கோயிலினுள் அழைத்து சென்றனர்.