உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் சிறப்பு திருவிளக்கு பூஜை
ADDED :3012 days ago
நாமக்கல்: நாமக்கல்லில், மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில், பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், பூஜை செய்து வழிபட்டனர். மழை வேண்டி, விவசாயம் செழிக்க, உலக நன்மை, செல்வம் பெருக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கல்வி மேன்மைக்காக நடத்தப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.