உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாயிபாபா ஜெயந்தி விழா சோமையனூரில் துவக்கம்!

ஸ்ரீ சத்ய சாயிபாபா ஜெயந்தி விழா சோமையனூரில் துவக்கம்!

கோவை : கோவை சோமையனூர் ஸ்வாகதம் சாய் மந்திரில், ஸ்ரீ சத்ய சாயிபாபா ஜெயந்தி விழா, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. கோவை மாவட்டம் சோமையனூர் தடாகம் ரோட்டில், "ஸ்வாகதம் சாய் மந்திர் அமைந்துள்ளது. ஸ்ரீ சத்ய சாயிபாபா உருவச்சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், அவரது ஜெயந்தி விழா கொண்டாட்டம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் துவங்குகிறது. காலை 8.30 மணிக்கு சுதர்சன ஹோமம், பகல் 12.30 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 6.30 மணிக்கு காஞ்சி மடம் வித்வான் சுப்பிரமணியம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 22 காலை 6 மணிக்கு பிரத்யங்கரா ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், வசோர்த்தாரை ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. நவ.,23 காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, 7 மணிக்கு ஆயுஷ்ய ஹோமம், ஆவஹந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், சண்டி ஹோமம் நடக்கின்றன. பகல் 12.30 மணிக்கு வடு பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, மாலை 6 மணிக்கு சாயிக்கிருபா பஜன், 7 மணிக்கு பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா நாட்களில், ஷீரடி சாயி நாதருக்கு, நான்கு வேளைகளிலும், ஆரத்தி நடக்கிறது. உலக நன்மைக்காக நடத்தப்படும் ஹோமம், அபிஷேக நிகழ்ச்சிகளை, வேத விற்பன்னர்கள் நடத்தி வைக்கின்றனர். ஏற்பாடுகளை, ஸ்வாகதம் சாய் மந்திர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !