மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2982 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2982 days ago
சோழவரம்: செங்காளம்மன் கோவிலில், 6ம் ஆண்டு, தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. சோழவரம் அடுத்த, அலமாதி பகுதியில், செங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 6ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த, 3ம் தேதி, கோமாதா பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், எச்சாத்தம்மன் கோவிலில் இருந்து, மஞ்சள் நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தல், அக்னி காப்பறை, தினமும் மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.விழாவின், 7ம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, எச்சாத்தம்மன் கோவிலில் இருந்து, பால்காவடி எடுத்து வரப்பட்டு, செங்காளம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.மாலை, 6:00 மணிக்கு பூ அலங்காரமும், இரவு, 7:00 மணிக்கு வாண வேடிக்கைகளுடன், தீமதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள், தீமிதித்து வழிபட்டனர். தீமிதி திருவிழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.
2982 days ago
2982 days ago