கீழாமூர் பழனியம்மன் கோவில் தேர் விழா
ADDED :2981 days ago
மேல்மருவத்துார்: கீழாமூர் பழனியம்மன் கோவில் திருத்தேர் பவனி உற்சாகமாக நடைபெற்றது. மதுராந்தகம் வட்டம், கீழாமூர் கெங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா மற்றும் பழனியம்மன் கோவில் திருத்தேர் உலா சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக, அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம் போன்றவை கோலாகலமாக நடைபெற்றன. உற்சத்தின் ஏழாம் நாளான நேற்று, பழனியம்மன் கோவில் திருத்தேர் பவனி, விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேர் உலாவை தரிசித்தனர். இன்று வசந்த உற்சக வைபவமும் நடைபெற உள்ளது.