உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில்களில் நான்கு நாள் அன்னாபிஷேகம் நிறைவு

பழநி கோயில்களில் நான்கு நாள் அன்னாபிஷேகம் நிறைவு

பழநி; உலக நலனுக்காக பழநி கோயில்களில் நடந்த அன்னாபிஷேகம் நிறைவடைந்தது. கடந்த ஜூலை 7ல் பழநி மலைக்கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. உச்சிக்காலத்தில் முருகனுக்கு 108 சங்கு புனிதநீர் அபிஷேகம் செய்து, அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், செந்தில்குமார், கார்த்திக் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதேபோல ஜூலை 8ல் திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஜூலை 9ல் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் செய்தனர். நேற்று (ஜூலை10ல்) கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்ணு ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !