உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

கம்பராயப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில்மூன்று நாட்கள் நடக்கும் தேரோட்டம் இன்று துவங்கிறது.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித்தேரோட்டம் 2003ல் நடந்தது. அதற்கு பின் பல்வேறு காரணங்களால் நடத்தப்படவில்லை.13 ஆண்டிற்குபின் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஜூலை 3ல் கொடியேற்றம் நடந்தது. தினமும்  ஒவ்வொரு சமூகத்தினரும் மண்டகப்படி நடத்தி வருகின்றனர்.8ல் திருக்கல்யாணம், வேளாளர் சங்கங்களின் மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது.தொடர்ந்து நேற்று சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.இன்று மாலை 4:35 மணியளவில் தேர் நிலையில் இருந்து கிளம்பிவ.உ.சி., திடலில் நிற்கும். நாளை அங்கிருந்துகிளம்பி பார்க் ரோடு சந்திப்பில் நிற்கும். ஜூலை 13ல் அங்கிருந்து காந்திஜிவீதி, வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடுவழியாக தேர் வந்து சேரும். தேரோட்டத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.ஏற்பாடுகளை தேர்க்கமிட்டி தலைவர் எஸ்.டி.டி.இளங்கோவன், செயல் அலுவலர் செந்தில்குமார், ரதஉற்சவ கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !