வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அன்னதான கூடம் திறப்பு
ADDED :3123 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், 14.4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அன்னதானம் கூடத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கான போதிய கட்டட வசதி இன்றி இருந்தது. புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி, பணி நடந்து வந்தது.அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று, அன்னதான கூடத்தை திறந்து வைத்தார்.விழாவில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.