கோவில் அருகில் மழை நீர் காஞ்சியில் பக்தர்கள் அவதி
ADDED :3111 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே தேங்கிய மழைநீரால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலின், மேற்கு மதில் சுவரையொட்டி உள்ள தெருவில், ரேஷன் கடை மற்றும் வீடுகள் உள்ளன. காஞ்சிபுரத்தில், இருநாட்களுக்கு முன் பெய்த மழையால், மதில் சுவரின் அருகே, மழைநீர், குட்டை போல தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. இதில் இறங்கி செல்ல, கோவில் பக்தர்கள், ரேஷன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இப்பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மழைநீரை அகற்றுவதோடு, இங்கு மீண்டும் தேங்காதவாறு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.