கோவிலில் தூய்மைப் பணி
ADDED :3043 days ago
புதுச்சேரி: கரையாம்புத்துார் அரசு பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தென்னம்பாக்கம் அழகர் கோவில் துாய்மை பணி மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகதாம்பிகை முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் தனசு வரவேற்றார். புதுச்சேரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குழந்தைசாமி, ஒருங்கிணைப்பாளர் சவுந்திரராஜன் ஆகியோர், மாணவர்களின் துாய்மைப் பணி திட்டத்தை துவக்கி வைத்தனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தரணிதரன், பாலாஜி ஆகியோர் செய்தனர்.