உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விட்டுகட்டி மஹா கணபதி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி விழா

விட்டுகட்டி மஹா கணபதி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி விழா

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்து, விட்டுகட்டியில் உள்ள மஹா கணபதி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, விட்டுகட்டியில் மஹா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் விநாயகருக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், சந்தனம் ஆகிய பொருட்களைக் கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. லாலாப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !